பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ்க, இவரது மனைவி பின்னணி பாடகி சைந்தவி. காதல் திருமணம் செய்தவர்கள். இப்போது மனைவியைப் பிரிவதாக ஜிவி பிரகாஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில், நீண்ட யோசனைக்குப் பிறகு சைந்தவியும் நானும் திருமணமாகி 11 வருடங்கள் கழித்து, ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையைக் காத்துக்கொண்டு, எஎங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்தோம். இந்த ஆழமான தனிப்பட்ட மாற்றத்தின்போது எங்கள் தனியுரிமையைப் புரிந்துகொண்டுமதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் பிரிந்து வருகிறோம் என்பதை ஒப்புக்கொண்டு, இது ஒருவருக்கொருவர் சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்தக் கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
ஜிவி பிரகாஷ் , சைந்தவி2013ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்த விவாகரத்துக்கு சைந்தவியின் தாயார் தான் முக்கிய காரணம் என்று கிசுகிசுக்கள் வெளியாகி உள்ளது.