அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா பொருட்களை விற்றதாக டெல்லி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ரமணா, மற்றும் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் உள்பட சுமார் 40 பேர் மீது பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 26 பேருக்கு இன்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை வழங்கியது. ஏற்கனவே 16 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை கொடுக்கப்பட்டுள்ளது.