வன்னியர் சங்கத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏவுமான மறைந்த ஜெ.குருவின்
63-வது பிறந்த நாள் அவரது சொந்த ஊரான காடுவெட்டி கிராமத்தில் கொண்டாடப்பட்டது. அங்குள்ள குரு மணிமண்டபத்தில்
அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பிலும், காடுவெட்டி கிராம முக்கியஸ்தர்கள் சார்பிலும்
அரியலூர் மாவட்ட செயலாளர் ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு தலைவர் – காடுவெட்டி – ரவி தலைமையில் பாமக நிர்வாகிகள்
குருவின் திருஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்.