திருச்சியில் கடந்த 17.11.2022ம் தேதி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் ராஜேஸ்வரி பேக்கரி அருகில் மனித உயிருக்கும், உடலுக்கும் கேடு விளைவிக்கும் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா போதை பொருளை டூவீலரில் வைத்து விற்பனை செய்த உறையூர் பங்காளி தெருவை சேர்ந்த அபுதாகீர் (26) என்ற வாலிபரிடமிருந்து சுமார் 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இதன் மதிப்பு 20 ஆயிரம் ஆகும். அபுதாகீரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பு வைத்தனர். மேலும் விசாரணையில் அபுதாகீர் மீது கஞ்சா விற்பனை செய்ததாக 4 வழக்குகளும், ஒரு அடிதடி வழக்கு உட்பட 6 வழக்குள் பல்வேறு போலீஸ் ஸ்டடேசன்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அபுதாகீர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் கஞ்சா போதை பொருளை தொடர்ந்து விற்பனை செய்யும் எண்ணம் உடையவர் என விசாரணையில் தெரிய வருவதால் அவரின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகர மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன் கஞ்சா விற்பனையாளரான அபுதாகிரை குண்டாசின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் ரவுடி அபுதாகீர் மீது குண்டாசின் கீழ் அடைக்கப்பட்டனர். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர கமிஷனர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
