Skip to content

மயிலாடுதுறை கோர்ட்டில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

நெல்லை நீதிமன்றம் அருகே  இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த வகையில் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பிஸ்டல் ஏந்திய காவல் உதவி ஆய்வாளர் ஜான்சிராணி தலைமையில், எஸ்எல்ஆர் ஏந்திய ஆயுதப்படை போலீசார் 2 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே ஆயுதப்படை போலீசார் 5 பேர் வழக்கமான பாதுகாப்புப் பணியில் உள்ள நிலையில், டிஜிபி உத்தரவின்பேரில் இந்த கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!