மகாராஷ்டிரா நவி மும்பையில் முடிமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல் நகைக் கடையில் கொள்ளையடிக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வைரலாகியது. கருப்பு உடையில் வந்த கொள்ளையர்கள் நகைக்கடை ஊழியர்களை தாக்கி ரூ. 11.80 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
3 நிமிடங்களில் கொள்ளையர்கள் நான்கு முதல் ஐந்து சுற்றுகள் வரை துப்பாக்கிசூடு நடத்தினர். ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நகைக்கடை கொள்ளை சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வௌியாகியது. இதன் அடிப்படையில் வழக்குப்பிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.