குஜராத்தின் ராஜ்கோட்டில் டிஆர்பி விளையாட்டு மண்டலம் உள்ளது. கோடை கால விடுமுறை என்பதால் சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர். அப்போது தற்காலிக கூடாரம் ஒன்றில் திடீரென தீப்பற்றியது. இந்த தீ இதர பகுதிகளுக்கும் பரவியது. இதில் சிக்கிய சிறுவர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து டிஆர்பி விளையாட்டு மண்டலத்தின் உரிமையாளர் யுவ்ராஜ் சிங் சோலங்கி கைது செய்யப்பட்டார்.