Skip to content
Home » குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12-ம் தேதி பதவி ஏற்பு…

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12-ம் தேதி பதவி ஏற்பு…

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் குஜராத்தில் பாஜக வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து வரும் 12-ம் தேதி குஜராத் முதல் – மந்திரியாக பூபேந்திர பட்டேல் மீண்டும் பதவியேற்கிறார். 12-ம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *