குஜராத் மாநிலத்தில் 2002 ம் ஆண்டு பஞ்சமஹால் மாவட்டத்தின் டெலோல் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் அனைவரையும் அம்மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. இவர்களில் 8 பேர் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போது இறந்ததால் இவர்கள் மீது விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. சாட்சிகளை தேடும் முயற்சியில் ஒரு ஆற்றின் கரையில் இருந்து எலும்புகளை போலீசார் மீட்டனர். ஆனால் அவை இறந்தவர்களின் அடையாளத்தை கண்டறிய முடியாத அளவுக்கு எரிந்து இருந்தது. இந்த வழக்கில் சாட்சியாக இருந்த இறந்தவர்களின் உடல்கள் சாட்சியங்களை அழிக்கும் நோக்கத்துடன் எரிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் குற்றம் சாட்டினர். இதனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, குற்றவாளிகள் 22 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும், அதில் 8 பேர் விசாரணையின்போதே இறந்துவிட்டதாகவும் சோலங்கி கூறியுள்ளார்.