பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவரங்கள் குறித்து டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பாக அவர் மத்திய தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் விண்ணப்பித்தும் இருந்தார். தகவல் அறியும் உரிமை ஆணையம் பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகலை கெஜ்ரிவாலுக்கு வழங்க பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கில் ஆமதாபாத் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகலை கேட்ட டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அவரது பட்டப்படிப்பு சான்றிதழை வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கும் தடை விதித்தது.