Skip to content

16ஆயிரம் இருதய ஆபரேஷன் செய்த டாக்டர் 41வயதில் மாரடைப்பில் பலி

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி (41). இவர், இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிவந்தார். ஜாம்நகரில் மருத்துவம் பயின்ற இவர், அகமதாபாத்தில் இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் தனது பணிக் காலத்தில் 16 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து உள்ளார்.

எனினும்,  கடந்த செவ்வாய்க்கிழமை காலை மாரடைப்பால் இவர் உயிரிழந்தார். திங்கள் கிழமை இரவு நோயாளிகளுக்கு வழக்கம்போல் மருத்துவம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய அவர், இரவு உணவுக்குப் பிறகு படுத்து தூங்கியுள்ளார்.  காலை நீண்ட நேரம் ஆகியும் எழாததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால் அவர் எழுதிருக்கவில்லை உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். மாரடைப்பால் அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!