குஜராத் சட்டமன்றத்திற்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இந்த தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட ஆம்ஆத்மி 5 இடங்களை பிடித்தது. அதில் விசாவிதார் தொகுதியில் பூபேந்திர பயானி என்வர் வெற்றி பெற்றார். அவர் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் சபாநாயகர் சங்கா் சவுத்ரியிடம் வழங்கினார்.