மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் வசித்து வருபவர் ராணி. இவருக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக கடந்த வருடம் பிறந்த ஆண்குழந்தை பிறக்கும்போதே இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் இல்லாமல் பிறந்தது. பதினோரு மாதம் ஆகிய மாற்றுத்திறனாளி குழந்தையுடன் கணவரின் ஆதரவு இல்லாமல் தாய்
வீட்டில் தற்போது வசித்து வரும் ராணி சிரமமான சூழ்நிலையில் குழந்தைகளை பராமரித்து வருவதற்கு உதவி கோரியிருந்தார். இதையடுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சீனிவாசன்,முடல் நீக்கியல் வல்லுநர் ரூபன்ஸ்மித் ராணி வீட்டில் குழந்தையை பார்வைியிட்டு மாற்றுத்திறனாளி பராமரிப்பு மற்றும்உயர் ஆதரவு திட்டத்தில் 3000 ருபாய் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராணிக்கு செம்பனார்கோயில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் கஞ்சாநகரம் அய்யனார் குழந்தைகள் மையத்தில் குழந்தைகள் மைய உதவியாளருக்கான பணி நியமண ஆணையை கருணை அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் ஆகியோர் வழங்கினர். தனக்கு வேலை வழங்கிய தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் ராணி நன்றி தெரிவித்தார்.