திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராணிபாபு. இவருக்கு ஒரு மகன் உள்ளார். இருவரும் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் துப்புரவு வேலை செய்து வருகிறார்கள். இருவரும் தலா ரூ.10 ஆயிரம் மாத சம்பளம் பெறுகிறார்கள்.
இந்த நிலையில் இவர்களுக்கு திருச்சியில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து ஒரு தபால் வந்துள்ளது. அதில் தாங்கள் நடத்தும் தொழிற்சாலைக்கான ஜிஎஸ்டி வரி ரூ.2.39 கோடி பாக்கி உள்ளது. அதனை கட்டுங்கள் என கூறப்பட்டு உள்ளது. இதனால் தாயும், மகனும் அதிர்சசி அடைந்தனர்.
உடனடியாக அவாகள் அந்த பகுதியில் உள்ள சிலரிடம் காட்டி , நோட்டீசில் என்ன கூறப்பட்டுள்ளது என கேட்டு உள்ளனர். அவர்கள் ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என கூறுப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
அன்றாடம் காய்ச்சியான எங்களுக்கு எந்த தொழிற்சாலையும் இல்லை. பின்னர் ஏன் என் பெயில் நோட்டீஸ் வந்துள்ளது என தாயும், மகனும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நோட்டீஸ் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள வணிகவரி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள வணிகவரித்துறை அதிகாரியிடம் இதுபற்றி கேட்டபோது நோட்டீஸ் அனுப்பியதை அ திகாரிகள் ஒத்துக்கொண்டனர். இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தான் கோா்ட்டுக்கு சென்று பிரச்னைகளை தீர்த்து கொள்ள வேண்டும் என்றனர்.