தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. குருப் 1 குருப் 2 குருப் 4 என பல வகைகளில் நடத்தப்படும் இந்த தேர்வுகளை மாணவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என லட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர். இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி நடத்தப்பட்டது கிராம நிர்வாக அலுவலர், இடைநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக காலியாக உள்ள 7382 பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தேர்வு முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
15 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் ஜனவரியில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 7,301 பணியிடங்கள் இருந்த நிலையில் குருப்-4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 9,870 ஆக அதிகரித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஜனவரியில் ரிசல்ட் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குரூப் 4 தேர்வைத் தமிழ்நாடு முழுவதும் 18.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். பணியிடங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் அதிகப்படியான தேர்வர்களுக்கு அரசுப் பணிக்கான வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.