திமுக அரசு பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் குரூப்1 முதல் குரூப் 4 வரை அனைத்து தேர்வுகளும் முறையாக நடத்தி ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சியில் அரசு பணி பெற்ற இளைஞர்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 13ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதிலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு பணி வழங்கப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 25ம் தேதி தேர்வாணையத்தால் வெளியிடப்பட உள்ளது.
தேர்வு அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னே தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டு பல ஆயிரம் ரூபாய் கட்டணத்துடன் பயிற்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்ட இளைஞர்களின் நலன் கருதி, அந்த மாவட்டத்தை சேர்ந்த மின்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, கரூரில் TNPSC Group 4 தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
V செந்தில்பாலாஜி அறக்கட்டளை சார்பாக, TNPSC Group 4 தேர்வுக்கான இலவச கோச்சிங் வகுப்புகளை கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார் . அத்துடன் இங்கு பயிலும் அனைவருக்கும் தரமான பயிற்சியாளர்களைக்கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. கரூர் மாவட்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
புதிய பாடத்திட்டத்தின் படி நடக்கும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் அலைபேசி எண் : 8148192175 – ஐ தொடர்புக் கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.