டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குருப்-2 தேர்வில் (நேர்முகத்தேர்வு பதவிகள்) சான்றிதழ் சரிபார்ப்புக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அவர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் குறைபாடாகபதிவேற்றம் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் வகையில், அவர்கள் விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜனவரி 27-ம்தேதி நள்ளிரவு 11.59 மணி வரை இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இத்தககவல் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.