தமிழ்நாடு முழுவதும் இன்று காலை குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது. கோட்டாட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 90 காலியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு 2 லட்சத்து 38 ஆயிரத்து 255 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியின்மை காரணமாக 8 பேரின்விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக குருப்-1 முதல்நிலைத் தேர்வெழுத தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 797 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 124 மையங்களில் 37,891 பேர் தேர்வெழுத உள்ளனர்.
முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சிபெறுவோருக்கு அடுத்த கட்டமாகமெயின் தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் விரிவாகபதிலளிக்கும் வகையில் விடைத்தாள் அமைந்திருக்கும்.