பழைய பாராளுமன்றத்திற்கு விடை கொடுத்துவிட்டு இன்று முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடக்கிறது. பாராளுமன்ற நடவடிக்கைகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு முன்பு மக்களவை, மேல்-சபை எம்.பி.க்கள் பழைய பாராளுமன்றத்தின் உள் முற்றத்தில் ஒன்றாக குரூப் புகைப்படம் எடுத்து கொண்டனர். பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட 750 எம்.பி.க்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது பா.ஜனதா மேல்-சபை எம்.பி. நர்ஹரி அமீன் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு மற்ற உறுப்பினர்கள் உதவினர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் சகஜ நிலைக்கு திரும்பி புகைப்பட அமர்வில் பங்கேற்றார்.
குரூப் போட்டோ எடுத்தபோது பாஜ., எம்.பி. மயங்கி விழுந்ததால் பரபரப்பு….
- by Authour
