தமிழ்நாடு அரசின் தேர்வாணையம்(TNPSC) குரூப் 4 க்கான தேர்வு அறிவிப்பினை இன்று வெளியிட்டு உள்ளது. இந்த தேர்வு வரும் ஜூலை மாதம் 12ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர், இன்று முதல் அடுத்த மாதம் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . குரூப் 4 தேர்வு மூலம் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு ஆகும்.
10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த தேர்வில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.