குரூப் 1 முதல்நிலைத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று காலை நடந்தது. 90 இடங்களுக்கான இந்த தேர்வில் பங்கேற்க 2லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அதாவது ஒருபதவிக்கு 2647 பேர் போட்டியிட்டனர்.தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களிலும் இந்த தேர்வு நடந்தது.
ஆனால் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் பலர் தேர்வு எழுத வரவில்லை. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் இந்த தேர்வு 31 தேர்வு கூடங்களில் நடந்தது. இதற்காக 6719 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் திருச்சி மாவட்டத்தில் 3,185 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதாவது ஏறத்தாழ 45 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை. மற்றவர்கள் தேர்வு எழுதினர். திருச்சி வாசவி வித்யாலயா பள்ளியில் நடந்த தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார். தேர்வுக்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.