அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமம் மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் செல்வராசு. இவரது மகன் செல்வகுமார் இளநீர் வியாபாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி இயற்கை உபாதைக்காக சென்றபோது பின் தொடர்ந்து சென்று கற்பழிக்க முயற்சித்துள்ளார்.
இதில் மாணவி அவரிடமிருந்து போராடி தப்பித்து பெற்றோர்களிடம் நடந்ததை கூறியுள்ளார்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் செல்வக்குமார் மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தில் கைது செய் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.