Skip to content
Home » கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரிகள் வட்டாட்சியர் அலுவலத்தில் நிறுத்தி வைப்பு..

கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரிகள் வட்டாட்சியர் அலுவலத்தில் நிறுத்தி வைப்பு..

  • by Senthil

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த சிங்கம்பட்டி பகுதியில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட நான்கு டிப்பர் லாரிகள் மற்றும் கிராவல் மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி வாகனத்தை ஊர் பொதுமக்கள் நேற்று மாலை சிறை பிடித்தனர். தொடர்ந்து கிராவல் மண் கடத்தல் குறித்து கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தனர்.

புகாரின் பேரில் அப்பகுதிக்கு வந்த கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட நான்கு டிப்பர் லாரிகளையும், ஒரு ஹிட்டாச்சி வாகனத்தையும் பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்த கடவூர் வட்டாட்சியருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் தொடர்ந்து செல்போன் அழைப்புகள் வந்ததால் அவருக்கு ஏற்பட்ட பணி ரீதியான இடையூறுகளால் அப்பகுதியில் இருந்து

வாகனத்தின் சாவிகளை எடுத்துக்கொண்டு இரவு திரும்பி சென்றார்.

மீண்டும் இன்று காலை பாலவிடுதி காவல் நிலைய போலீசார் பாதுகாப்புடன் அப்பகுதிக்கு சென்ற கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் நான்கு டிப்பர் லாரிகளையும், ஒரு ஹிட்டாச்சி வாகனத்தையும் பறிமுதல் செய்து எடுத்து வந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி உள்ளார்.

கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று டிப்பர் லாரிகளின் உரிமையாளர் கரூர் அடுத்த கோவிந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, மற்றொரு டிப்பர் லாரி உரிமையாளர் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், ஹிட்டாச்சி வாகன உரிமையாளர் குமார் மற்றும் ஓட்டுநர்கள் குமார், திருமலை, சுரேஷ்குமார், குமார் ஆகிய ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்ய பாலவிடுதி போலீசாருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!