தஞ்சை மாவட்டம் கல்லணை அடுத்த கோவிலடி என்ற இடத்தில் மணல் குவாரி செயல்படுகிறது , இந்த குவாரி தொடர்ந்து அங்கு செயல்பட்டால் கல்லணைக்கு ஆபத்து ஏற்படும். எனவே அந்த குவாரியை தடை செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் குவாரியால் அணைக்கு ஆபத்து உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கோட்டாட்சியர் ரஞ்சித், சுரங்கத்துறை உதவி இயக்குனர், தாசில்தார் உள்ளிட்ட 13 பேர் கொண்ட குழுவினர் இன்று கல்லணை பகுதியில் ஆய்வு செய்தனர். குறிப்பாக கோவிலடி மணல் குவாரி பகுதியையும் ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்துஆய்வு முடிவு குறித்து ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.