புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் ஊராட்சி, பொன்னங்கன்னிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் மு. அருணா கலந்து கொண்டு பேசினார். பின்னர் தூய்மை
பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கிய கலெக்டர், விவசாயிகளுக்கு இடுபொருட்களையும் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ம.வை.முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் .அ.கோ.ராஜராஜன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் .ஜெயலட்சுமி தமிழ்செல்வன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) .எஸ்.ஜி.சீனிவாசன், ஊராட்சிமன்றத் தலைவர் சி.சதீஸ்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.