Skip to content

டில்லிக்கு வர விருப்பமா? மாணவர்களிடம் பிரதமர் மோடி கேள்வி

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில்  புறப்பட்ட பிரதமர் மோடி சரியாக 10.37 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்றார்.  உள்ளே நுழைந்ததும் அங்குள்ள  பாரதிதாசன் உருவச்சிலைக்கு மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை செய்தார். அதைத்தொடர்ந்து   பட்டம்பெறுவோரில்   தங்கபதக்கம் பெற்ற  சுமார் 100 மாணவ, மாணவிகள் ஒரு அரங்கத்தில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் முன் வரிசையில் பிரதமர் மோடி அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  பிரதமருடன்   முதல்வர்  மு.க.ஸ்டாலின்,  கவர்னர் ரவி,  உயர்கல்வித்துறை அமைச்சர் கண்ணப்பன், ஆகியோரும் புகைப்படத்தில் உடன் இருந்தனர். பின்னர்  மாணவர்கள் அருகே  சென்று  பேசினார். அப்போது அவர் டில்லிக்கு வர விருப்பமா என்று கேட்டார். அதற்கு ஒரு சிலர் விருப்பம் தெரிவித்து கைகளை உயர்த்தினர். பலர் சிரித்துக்கொண்டனர்.

அதே ஹாலில் இன்னொரு புறம்  பல்கலைக்கழக பேராசிரியர்கள்  பட்டமளிப்பு விழா உடையுடன் இருந்தனர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர்  பட்டமளிப்பு விழா  அங்கி அணிந்து  10.45 மணிக்கு பிரதமர் மோடி  பட்டமளிப்பு விழா அரங்கம் வந்தார். அதைத்தொடர்ந்து  தேசியகீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.  அதைத்தொடர்ந்து துணைவேந்தர்   பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கி,   அறிக்கை வாசித்தார்.  அதைத்தொடர்ந்து விழா  தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!