பண வரவு செலவு அனைத்தும் ஆன் லைன் வசமாக்கி விட்டோம் என்று பாஜகவினர் பெருமையாக சொல்வார்கள். ஆம் இப்போது அதுவும் அவர்களது தேர்தல் பணிக்கு கைகொடுத்து உள்ளது. கோவை பாஜகவினர் வாக்காளர்களுக்கு நேற்று பணம் கொடுத்தபோது பல இடங்களில் கையும் களவுமாக சிக்கிக்கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் இப்போது ஜி-பே மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருகிறார்கள். இதற்காக சிலர் போன் நம்பர் போன்ற விவரங்களை சேகரித்து செல்கிறார்கள். பின்னர் சம்பந்தமே இல்லாத நம்பர்களில் இருந்து பணம் வருகிறது. இதனால் கோவை வாக்காளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பாஜக ஜிபே மூலம் பணம் அனுப்புவதை அறிந்த திமுக இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது.