கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக யூடியூப் பிரபலம் ஜி.பி.முத்து வந்திருந்தார். அப்போது அவர் வந்திருந்த காரை இளைஞர்கள் பலர் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். மேலும், இளைஞர்களான ரசிகர்கள் தங்களது செல்போனில் அவரை படம் பிடித்தனர். இளைஞர்கள் ஹார்டின் விட்டு ஃபிளையிங் கிஸ் கொடுத்து
ஜி.பி.முத்துவுக்கு அன்பை பொழிய, அவரும் ரசிகர்களுக்கு திருப்பி கொடுத்தார். நம்ம திருவிழா என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜிபி முத்து வந்தார். மேலும், ஜி.பி.முத்து வந்திருந்த கருப்பு நிற காரில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்து போக்குவரத்து போலீசாரிடம் சிக்கியது சர்ச்சைக்கு உள்ளானது. இந்த நிலையில் ஜி.பி.முத்து வந்த காரின் முன்பக்கம் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.