இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட் நடந்து முடிந்த டி-20 உலக கோப்பை தொடருடன் ஒய்வு பெற்றார். இதையடுத்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில். இந்திய தலைமை புதிய பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி பற்றிய பார்வை, தனது அனுபவம் மூலம் தலைமை பயிற்சியாளர் இடத்திற்கு வந்துள்ளார். இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்தும் சிறந்த நபர் கவுதம்காம்பீர் என நம்புகிறேன். இவ்வாறு ஜெய் ஷா கூறியுள்ளார். முன்னதாக, நிகழ்ச்சீ ஒன்றில் பேசிய கவுதம் கம்பீர் “இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற நான் விரும்புகிறேன். தேசிய அணிக்கு பயிற்சி அளிப்பதை காட்டிலும் வேறெதுவும் சிறந்த கவுரவம் இருக்காது. 140 கோடி மக்களின் பிரதிநிதியாக இயங்க வேண்டி இருக்கும். இந்தியா உலகக் கோப்பையை வெல்லும். அதற்கு அச்சமின்றி இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவரான கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்ற சரியான தேர்வாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியும் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது