தமிழ்நாட்டில் 8 போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாளை முதல் ஏப்.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பிற்பகல் 1 மணி முதல் ஏப்.21 வரை www.arasubus.tn.gov.in-ல் விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு குறைந்தபட்ச தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்து, செய்முறை தேர்வு, நேர்காணல் மூலம் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்படும். மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 364, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 318 பணியிடங்கள் காலியாக உள்ளன.
3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. MTC, SETC, TNSTC என அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதிகபட்சமாக கும்பகோணம் கோட்டத்தில் 756 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யபப்பட்டுள்ளது. சேலம் மண்டலத்தில் 486, சென்னையில் 364 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள், நெல்லை மண்டலத்தில் 362, கோவை மண்டலத்தில் 344 காலிப்பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை, விழுப்புரம் மண்டலங்களில் தலா 322 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.