விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாண வர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 2 மாணவர்கள் இடைவேளையின்போது, ஓய்வறையில் இருந்த ஆசிரியர் கடற்கரையை (42) அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் தலை மற்றும் கையில் காயமடைந்த ஆசிரியரை திருத் தங்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஏடிஎஸ்பி முருகேசன், டிஎஸ்பி தனஞ்செயன், மாவட்டக் கல்வி அலுவலர் சிதம்பரநாதன் ஆகி யோர் விசாரணை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட 2 மாணவர்களும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பிளஸ் 1 சேர்ந்துள்ளனர்.
அரையாண்டுத் தேர்வு நெருங்கும் நிலையில் மாணவர்களை நன்றாகப் படிக்கும்படி ஆசிரியர் கடற்கரை கண்டித்துள்ளார். இத னால், ஆத்திரத்தில் மாணவர்கள் ஆசிரியரை வெட்டியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரி வித்தனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட 2 மாணவர்களையும் கைது செய்த போலீஸார், அவர்களை விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மேலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.