திருச்சி மாவட்டம் குண்டூர் அய்யனார் நகர் 3வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் மோகன ராஜன்(46). இவர் மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மோகன ராஜன் ஒரு சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் பாதிப்பில் இருந்து முழுமையாக அவரால் விடுபட முடியவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மோகன ராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.