Skip to content

300 மார்க் வாங்கிய சிறப்பு குழந்தைக்கு 11ம் வகுப்பில் இடம் தர மறுக்கும் அரசு பள்ளிகள்

கோவை செட்டிவீதியை சேர்ந்த வரலட்சுமி என்பவரின் சிறப்பு குழந்தை கோவை காந்திபார்க், சலிவன் வீதியில் உள்ள மாரண்ண கவுண்டர் உயர்நிலை பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை சிறப்பாக படித்து  10 ம் வகுப்பு அரசு பொதுதேர்வில் ஆசிரியர்களின் உதவியுடன் தேர்வெழுதிய அந்த மாணவன்  500க்கு 300 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி  பெற்றான். அதை தொடர்ந்து மேல்நிலை கல்வியான பதினொன்றாம் வகுப்பில் சோக்க கோவையில் உள்ள அரசு பள்ளிகள் மறுப்பதாக வேதனையுடன் தெரிவித்தார் வரலட்சுமி.

சில அரசு பள்ளிகளில் உங்கள் மகனை தனியார் பள்ளியில் படிக்க வையுங்கள் என்று மனசாட்சி இல்லாமல் பேசுவதாகவும், தனியார் பள்ளிகளில் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை செலவாகும் என்கிறார்கள் எங்களுக்கு அந்த அளவிற்க்கு வசதி வாய்ப்புகள் இல்லை என்று கண்ணீர் மல்க கூறுகிறார் வரலட்சுமி.

மேலும் எந்த பள்ளியிலும் எனது மகனை சேர்காததால் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்ததாகவும், அனைத்து திறமைகளும் கொண்ட எனது மகனுக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்க மாவட்ட ஆட்சியர் உதவிபுரிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.தமிழக அரசை பொறுத்தவரை இல்லம் தேடி கல்வி, மற்றும் பல்வேறு  திட்டங்களை  செய்துவரும் நிலையில் தனது சிறப்பு குழந்தையின் கல்விக்காக போராடி வரும் ஒரு தாயின் அழுகுரல் கேட்குமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!