Skip to content
Home » திருவெறும்பூர் அரசு பள்ளியில் அத்துமீறும் சமூகவிரோதிகள்… கலெக்டரிடம் ஆசிரியைகள் புகார்

திருவெறும்பூர் அரசு பள்ளியில் அத்துமீறும் சமூகவிரோதிகள்… கலெக்டரிடம் ஆசிரியைகள் புகார்

  • by Senthil

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த  வாழவந்தான் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டதுவக்க விழா நடந்தது. விழா விற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தலைமை தாங்கினார்.

சிறப்பாக செயல்படும் பள்ளி ஆசிரியருக்கு சிறப்பு ஆசிரியர் விருது வழங்கப்டும் என்று கல்வி அதிகாரி  கூறினார்.

வாழவந்தான் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சின்னம்மாள்,  ஒன்றிய கவுன்சிலர்கள் சுபத்ராதேவி,  பழனியம்மாள்மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பேபி, திருவெறும்பூர் தாசில்தார் சிவ பிரகாசம், திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்ச்செல்வி, அழகுமணி, அனைத்து வகை பள்ளியில் ஒருங்கிணைப்பாளர் அன்பு சேகரன் திருவெறும்பூர் வட்டார கல்வி அலுவலர் ரெஜி பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எங்கள் பள்ளி மிளிரும்பள்ளி திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழக முதல்வர் தொடங்கி வைத்த மஞ்சள் பை திட்டத்தை செயல்படுத்தி பள்ளி மாணவ மாணவியர் நீங்கள் கடைகளில் பொருள்கள் வாங்க செல்லும் பொழுது வீட்டில் இருந்து பையை எடுத்துச் செல்ல வேண்டும்.

அதேபோல் டீ கடைகளில் பிளாஸ்டிக் கையில் டீ நிரப்பி தருவதை குடிக்க கூடாது பள்ளியில் தூய்மையை காப்பதுடன் பள்ளியில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை

பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

பள்ளி வளாகத்தில் மரம் நட்டு சுற்று சூழல் பேணி காப்பதுடன் நிலத்தடி நீரையும் பாதுகாக்க வேண்டும்.

மேலும் பள்ளி வளாகத்தில் ஆர்கானிக் முறையில் காய்கறி செடிகளை வளர்ப்பதுடன் பள்ளிக்கு தேவையான காய்கறிகள் கிடைக்கும் மாவட்ட அளவில் சுகாதாரப்பள்ளி தேர்வு விருது ஒரு பள்ளிக்கு வழங்கப்படும் அந்தப் பள்ளியாக இந்த பள்ளியை தேர்வு செய்யப்படுவதற்கு மாணவர்கள் 100 சதவீதம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். அப்பொழுது 2022 மற்றும் 2023 நிதி ஆண்டில் 31.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை பார்வையிட்டார் அதில் பள்ளி மாணவ மாணவிகள் எளிதாக கல்வி கற்கும் மையத்தில் படங்களுடன் கூடிய அடிப்படை கல்வி வாசகங்கள் இடம் பெற்று இருந்தது.

முன்னதாக பள்ளி தூய்மை உறுதிமொழியை மாணவ மாணவிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் பிரதீப் குமார் எடுத்துக்கொண்டார்.

அப்பொழுது பள்ளி மேலாண்மை குழுவை சேர்ந்த பெண்கள் கலெக்டர் இடம் பள்ளி வளாகத்தில் சமூக விரோதிகள் விடுமுறை நாட்களில் உள்ளே நுழைந்து மது அருந்துவதும் பாட்டில்களை ஆங்காங்கே உடைத்து வீசுவதும் பள்ளி ஆசிரியைகளை பற்றி ஆபாசமாக சுவர்களில் எழுதுவதும் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகளை அடித்து நொறுக்குவதும் மேலும் பள்ளியில் இருந்த கேஸ் அடுப்பு, சிலிண்டர், மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றையும் திருடி சென்று விட்டதாகவும் இதனால் விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் பள்ளி நுழையும் பொழுது பயத்துடனும் அச்சத்துடன் பள்ளிக்குள் நுழைகிறார்கள்

இதனை தடுப்பதற்கு கலெக்டர் பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமரா அல்லது மதில் சுவரை உயரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து மனு கொடுத்தனர். இப் பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு  கலெக்டர் உத்தரவிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!