விருதுநகர் மாவட்டம் சாத்துார் சடையம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன் (37). இவர் அதேப்பகுதியில் உள்ள பனையடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் அதேப் பள்ளியில் படித்து வரும் பிளஸ் 2 மாணவி ஒருவரின் செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் தொடர்ந்து ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் தங்கப்பாண்டியனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.