அறந்தாங்கி கல்வி மாவட்டம் வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதி வண்டியினை தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். மேலும் மரக்கன்றுகளையும் நட்டு மாணவச்செல்வங்களுக்கு அறிவுரைகள் வழங்கி சிறப்பித்தார்கள். மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணிமொழிமனோகரன் முன்னிலை வகித்தனர். வரவேற்புரை: பள்ளி தலைமையாசிரியர் சின்னத்தம்பி, சிறப்புரை: புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்புராமன் Ex.
MLA; ஒன்றியச்செயலாளார் அரு.வடிவேலு,ஒன்றியக்குழு உறுப்பினர் பெரியசாமி, ஊராட்சி மன்றத்தலைவர் ராஜாங்கம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் நாகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவார் முத்துவீரன், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் சதாசிவம் திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கழக நிர்வாகிகள்: ராஜபெரியண்ணன் , பரமசிவம் ,பாலா,உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் இருபால் ஆசிரியப்பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.