பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவி திக்ஷனா. இவர் கடந்த கல்வியாண்டில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு மாநில அளவில் நடந்த கல்வி சாரா மன்ற செயல்பாடுகள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அந்த போட்டியில்
வெற்றி பெற்றதால் திக்ஷனா 6 நாள் கல்வி சுற்றுலாவாக தென்கொரியா நாட்டிற்கு பள்ளி கல்வித்துறை மூலம் அழைத்து செல்லப்படவுள்ளார். திக்ஷனாவின் தந்தை பழனியாண்டி பெரம்பலூரில் மளிகை கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து தென்கொரியாவுக்கு கல்வி சுற்றுலா செல்லவுள்ள திக்ஷனாவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட பள்ளிக்கல்வி துறை அலுவலர்களும், பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) மரகதம் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.