Skip to content
Home » அரசு பள்ளியில் மாதிரி பேரவைத் தேர்தல்….. உற்சாகமாக வாக்களித்த மாணவர்கள்…

அரசு பள்ளியில் மாதிரி பேரவைத் தேர்தல்….. உற்சாகமாக வாக்களித்த மாணவர்கள்…

  • by Authour

மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் அதற்கான அடிப்படை தேர்தல் தான், தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சி அமை க்கும்.இதற்கு வாக்களிப்பது தான் முதல் கடமையாக உள்ளது. 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின் போதும் அதற்கான பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கின்றது.

இந்நிலையில் தேர்தல் எப்படி நடத்தப்படுகின்றது அந்த தேர்தல் களத்தில் உள்ளவர்கள் எப்படி களம் காண வேண்டும் என்பதை மாணவர்கள் அறிந்து கொள்வதோடு மட்டுமின்றி வெற்றி பெற்றால் அவர் களுக்கான கடமை என்ன? என்பதை விளக்கிடும் வகையில் அரசு பள்ளியில் 2023 ம் ஆண்டிற்கான மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் , மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒரு தலைமையாசிரியர் 34 ஆசிரியர்களும் 383 மாணவர்கள், 385 மாணவிகள் என மொத்தம் 768 மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் கிராமப்புரத்தையும் மிகவும் ஏழ்மை நிலையில்

வாழும் குடும்பத்தை சேர்ந்த வர்கள். இருப்பினும் இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் அவ்வப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சமூக நலன் சார்ந்த பல்வேறு விழிப்பு ணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலுக்கான தேதி முன்னதாகவே மாணவ. மாணவிகளுக்கு அறிவிக்கப் பட்டது. அதற்கான தேர்தல் அலுவலர் மற்றும் அதிகாரியாக ஆசிரியர்களே செயல்பட்டனர். முதலில் வேட்பு மனு தாக்கல், பின்னர் வேட்பு மனு பரிசீலனை என அனைத்தும் தேர்தல் தொடர்பான பணிகளும் நடைபெற்ற பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளி யிடப்பட்டத்து. இதில் 4 மாணவர்கள் 13 மாணவிகள் வேட்பாளர்களாக களத்தில் நிறுத்தப் பட்டனர். பின்னர் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.

வேட்பாளராக களம் கண்ட மாணவ, மாணவி கள் பல்வேறு வகுப்புகளில் உள்ள மாணவ, மாணவிகளை சந்தித்து தான் வெற்றி பெற்றால் பள்ளிக்கு ஆற்ற உள்ள பணிகள் குறித்து விளக்கிக் கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதே போல் தேர்தல் அதி காரிகளாக செயல்பட்ட ஆசிரியர்கள் அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் பூத் சிலிப் போன்று ஒரு சீட்டு கொடுத்து அதில் அவர்களின் பெயர் மற்றும் வகுப்பு ஆகியவற்றையும் குறித்து கொடுத்தனர்.

இது மட்டுமின்றி பள்ளி யின் ஒரு வகுப்பறையில் மாதிரி வாக்குச்சாவடியும் அமைக்கப் பட்டது. மேலும் வேட்பாளரின் வரிசை எண், பெயர் மற்றும் சின்ன ங்கள் அடங்கிய வாக்குச் சீட்டும் தயார் செய்து வைக்கப் பட்டது.

வாக்குச்சீட்டில் வாக்கை பதிவு செய்த பின்னர் அந்த மாணவ, மாணவிகள் வாக்குச்சீட்டை இரண்டு வாக்குப்பெட்டிகளில் போட்டு செல்லும் வகை யிலும் ஏற்பாடுகள் செய்யப் பட்டது. இதன் தொடர்ச்சியாக தேர்தல் நடை பெற்றது. அப்போது மாணவ, மாணவிகள் வாக்களிக்க வந்த போது அவர்களின் பெயரை தேர்தல் அலுவலர்களாக ஆசிரியர் கூற அங்கு முகவர்களாக செயல்பட்ட மாணவர்கள் பதிவேடுகளில் பார்த்து சரியா? என உறு திபடுத்தினர். பின்னர் வாக்களிக்க அனுமதிக்கப் பட்டதோடு அவர்களின் விரலில் மையும் வைக்கப்பட்டது. தொடர்ச்சியாக மாணவ, மாணவிகள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து முடித்த பின்னர் மாலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆசிரிய, ஆசிரியைகள் வாக்குச்சீட்டை தனித்தனியாக பிரித்து எண்ணிபின் பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் வெற்றி பெற்றவர்களின் பெயரை அறிவித்தார். இதில் முதல்வர், துணை முதல்வர் என இருவரை அறிவித்தனர்.இன்று நடைபெற்ற மாணவர் பேரவைத்தேர்தலில் 11ம் வகுப்பு B2 மாணவர் தனுஷ் 224 வாக்குகள் பெற்று முதல்வராகவும் .9B மாணவர் சக்திவேல் 162 வாக்குகள் பெற்று துணை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்கள் இருவரும் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவி ஏற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் முதல்வர், துணை முதல்வர் இணைந்து அமைச்சர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து மாணவ. மாணவிகள் திருக்குறள் மீது ஆணையிட்டு பதவிப்பிரமாணம் செய்து கொண்டதோடு பள்ளியின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் முயற்சிப்போம் என்று உறுதிமொழி அளித்தனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மலர் கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பின்னர் இதே போல் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் உள்ள மற்ற மாணவ. மாணவிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த தேர்தலுக்கான முழுமை யான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். மாணவ, மாணவிகள் மூலம் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை அறிந்து அதன்படி தேர்தல் தொடர்பான நடை முறை தலைமையாசிரியர் தலைமையில் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன் மற்ற பள்ளிகளுக்கும் முன்னு தாரமாக இருக்கும் வகையில் இந்த மாணவர் பேரவைத் தேர்தல் அமைந்தது.

இதனைத் தொடர்ந்து தொன்மை மன்றம் மற்றும் சமூக அறிவியல் மன்றம் இணைந்து மாணவ,மாணவிகள் கண்காட்சி நடத்தினர். இதில் பழங்கால பொருட்கள், உணவு தானியங்கள் சேகரிக்கும் மண் பாத்திரங்கள், பாண்டங்கள், சிறுதானியங்கள்,பழங்கால விளையாட்டு பொருட்கள், நாணயம், பணம், சுமைதாங்கி கற்கள், நினைவு சின்ன கற்கள், சொட்டுநீர் பாசன முறை, நுகர்வோர் சுரண்டப்படுதல், பொய் விளம்பரங்கள், எரிமலை, மொகஞ்சதாரோ சிந்து சமவெளி நாகரிகத்தை உணர்த்தும்பெருங்குளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, முதுமக்கள் தாழி அடங்கிய புகைப்படங்கள், பண்டமாற்று முறை உள்ளிட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியை மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கண்டு களித்தனர். அவர்களுக்கு கண்காட்சி குறித்து மாணவ,
மாணவிகள் விளக்கம் அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *