தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களின் நீட் பயிற்சி வகுப்பு துவங்க வற்புறுத்துவேன் –
அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்ற கருத்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழி யின் ஆசை ; தற்பொழுது அந்த இடத்திற்கு வேகன்ஸி இல்லை- திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு பேட்டி.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவா சங்கம் பள்ளியில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு கூறுகையில் :-
தமிழ்நாடு பொறுத்த வரை நீட் தேர்வால் கிராமப்புறங்களில் வாழக்கூடிய ஒடுக்கப்பட்ட மிகப் பின்தங்கிய பட்டியலின வேலையிலேயே குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் இதற்கு காரணம் நீட் தேர்வு கேட்கப்படுகின்ற கேள்விகள் பாடத்திட்டம் சென்ட்ரல் சிலபஸில் உள்ளது மாணவர்கள் ஸ்டேட் சிலபஸில் படித்து தேர்வுக்கு செல்கின்றனர் தற்பொழுது பல்வேறு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது வசதி உள்ள மாணவர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்கிறார்கள். சிறு சிறு ஊர்களில் பயிற்சி மையங்கள் கிடையாது அவர்கள் படிக்க வேண்டும் என்றால் அதிக செலவு ஏற்படுகிறது. நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் உயிரினத்துக்கொள்ள வருந்த தங்க நிகழ்ச்சிகளும் நடக்கிறது பெரும்பாலான கட்சிகள் நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆட்சியில் இருக்கக்கூடிய திமுக அமைச்சர் உதயநிதி தலைமையில் நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்காக இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது போல அரசு பள்ளி மாணவர்களுக்கும் நீர் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும் இதனை அமைச்சர்களிடம் வற்புறுத்துகிறேன்.
இது குறித்த அதிகாரிகளிடம் வற்புறுத்துகிறேன். சீக்கிரம் தொடங்குவார்கள் என நினைக்கிறேன்.
டி என் பி எஸ் சி தலைவராக சைலேந்திரபாபு தேர்வுக்கு ஆளுநர் மறுப்பு குறித்த கேள்விக்கு…
ஆளுநர் வழக்கமாக திருப்பி அனுப்பி உள்ளார். தமிழக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தாலும் பல்வேறு முக்கிய நடவடிக்கை எடுத்து அனுப்பும் பொழுது அதற்கு ஏற்பு தெரிவிக்காமல் சர்வாதிகாரி போல் காரண காரியங்கள் கேட்காமல் மறுப்பது கோப்புகளை நிறுத்தி வைத்துக் கொள்வது மிகுந்த கண்டனத்திற்கு உரிய விஷயமாகும். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாக ஆளுநர் இருக்க வேண்டும் தடைக்கல்லாக தடங்கலாக அவரது பதவி இருக்கிறது. அது வருந்துவதற்குரியது தொடர்ந்து ஆளுநர் மாற்றப்பட வேண்டும் என கூறுகிறார்கள் ஆளுநரை குறை சொல்வதை காட்டிலும் மத்திய அரசினை கூறலாம் இது மத்திய அரசின் வற்புறுத்தலின் பேரில் நடந்து கொள்கிறார் என்பது வெளிப்படையான உண்மை. பிஜேபிக்கு எதிராக இருக்கக்கூடிய மாநிலங்களுக்கு இடையூறு செய்கின்ற வகையில் மத்திய அரசு இருக்கிறது.
யோகி ஆதித்யநாத்திடம் ரஜினிகாந்த் ஆசி பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு…
தமிழகத்தில் நம்பர் ஒன்னாக இருக்க கூடிய கலைஞர்.
அவர் எந்த அரசியலிலும் இல்லை அவர் ஆன்மீகவாதி அவருக்கு யாரை பிடிக்கிறதோ அவரின் காலில் விழுவது அவர் தனிப்பட்ட விஷயம் அது அவருடைய மரியாதை பிரச்சினை யோகி ஒரு சாமியார் என்பதால் ஆசீர்வாதம் அவரை செய்தால் அதனால் யாருக்கும் நஷ்டமில்லை அவரை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.
உதயநிதி ஸ்டாலின் வருங்கால முதலமைச்சர் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுக்கு பதில் அளித்த அவர்..
தற்பொழுது முதல்வர் என்ற இடம் காலியாக இல்லை.
தமிழகத்தில் முதல்வர் வேக்கன்சி இருந்தால் அப்பொழுது அதைப் பற்றி யோசிக்கலாம்.
அவர் நூறு வருடம் வரை இருக்க வேண்டும்.
அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் உதயநிதிக்கு ஒரு வாய்ப்பு இருந்தால் வரட்டும்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசி இருப்பது அவர் தனிப்பட்ட விருப்பம்.
அவருடைய நெருங்கிய நண்பராக சகோதரராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் இதனால் அவர் ஆசையை கூறி இருக்கிறார்.
அதிமுக மாநாடு போட்டு செலவு செய்து நல்ல கூட்டத்தை கூட்டி இருக்கிறார் சிறப்பாக செய்து இருக்கிறார் அந்த கட்சியின் முன்னாள் முதலமைச்சர் மாநாடு போட்டு ஆட்சியைப் பிடிக்க போகிறேன் என்று தான் ஒருவர் அவருடைய விருப்பத்தை அவர் கூறுகிறார். யார் ஆட்சிக்கு வர போகிறார்கள் என்பது மக்களின் விருப்பம் தான். எங்களைப் பொறுத்தவரை சாலை நான் முதலமைச்சராக வருவார் எங்களுடைய கூட்டணி கட்சி தான் வெற்றி பெறும்.
மீண்டும் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் தேர்தலில் நிற்பதற்கு கட்சி முடிவு செய்யும்.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன் திமுகவில் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது அப்படி எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எந்த பதவியை இல்லாமல் 10 வருடம் தொண்டு செய்தேன்.
மத்திய அரசு 10 கோடி நிதியை பிடித்து வைத்துள்ளது அப்படி கொடுத்திருந்தால் கூட நிறைய கட்டங்களை செயல்படுத்தி இருப்பேன் என கூறினார்.