புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. அப்போது மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் மற்றும் இப்பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் இன்று காலை முதல் இப்பகுதியில் வீடு வீடாக சென்று தனியார் பள்ளிக்கு நிகராக பாடம் சொல்லித் தருவோம் என பெற்றோர்களிடம் உறுதி அளித்து, அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும்படி கூறினர்.
ஆசிரியர்களின் உறுதிமொழி ஏற்று, இன்று ஒரே நாளில் மட்டும் 40 குழந்தைகளை ஆர்வமுடன் பெற்றோர்கள் தங்களது ஐந்து வயது குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்த்தனர், இந்நிகழ்வில் மாணவ செல்வங்களை உற்சாகப்படுத்தும் வகையில் இனிப்புகள் வழங்கியும் மதிய உணவு பேக் மற்றும் பேனா ,பென்சில்கள் வழங்கி கைத்தட்டி பள்ளியில் சேர்த்தனர்
அப்போது தொடக்கப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் பேசுகையில் தனியார் பள்ளிக்கு நிகராக அல்ல, அதற்கும் மேலாக அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்த தயாராக இருக்கிறார்கள் என உறுதியளிக்கிறோம் எனவும் அரசு பள்ளியில் சேர்க்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் உயர்கல்வி செல்லும் வரை கிடைக்கும், எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டுமென உறுதியளித்து பேசினார், அதிகாரிகள், ஆசிரியர்களின் கூட்டு முயற்சிக்கு நல்ல பயன்கிடைத்தது. இதுபோல அதை்து அரசு பள்ளி ஆசிரியர்களும் செயல்பட்டால் தமிழ்நாட்டில் கல்வி இன்னும் சிறப்பாக இருக்கும் என பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.