Skip to content
Home » வாரியத்தலைவர் பதவி… பெண் அமைச்சருக்கு கல்தா?..

வாரியத்தலைவர் பதவி… பெண் அமைச்சருக்கு கல்தா?..

தமிழக அரசில் ஆதிதிராவிடத்துறை நலத்துறை அமைச்சராக இருப்பவர் கயல்விழி செல்வராஜ். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தாராபுரம் தொகுதியில் பாஜ தலைவராக இருந்த முருகனை தோற்கடித்ததால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் நடைபெறும் அமைச்சரவை மாற்றத்தில் கயல்விழி செல்வராஜ் மந்திரி சபையில் இருந்து தூக்கப்படலாம் என கூறப்பட்டு வரும் நிலையில் தூய்மை பணியாளர் நல வாரிய தலைவராக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது..

அதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு… 

முதலமைச்சர் தலைமையில் 08.07.2021 அன்று நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆய்வுக் கூட்டத்தில், தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களை நியமித்து வாரியம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்திற்கு ஓர் உபதலைவர், 14 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் புதிய 12 அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்டு இவ்வாரியத்தை திருத்தி அமைத்து அரசாணை (நிலை) எண்.61. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நாள் 03.05.2023 –இல் ஆணையிடப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!