செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர அரசு ஆணையிட்டிருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அரசு இணையதளத்தில் துறைகள் குறிப்பிடாமல் செந்தில் பாலாஜியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் உடல் நிலையின் காரணமாக, தங்கம் தென்னரசுக்கு மின்சாரத்
துறை, முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் பிரித்து வழங்கியதாக தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருந்தது.