மயிலாடுதுறை பல்நோக்கு சேவை மைய திட்டத்தை கைவிடக்கோரி கூட்டுறவு சங்க செயலர்கள், அலுவலகப் பணியாளர்கள் காலவரையற்ற விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் வாங்கப்பட்ட உபகரணங்களை மாவட்ட இணை பதிவாளர் தயாளவிநாயகன் அமல்ராஜிடம் ஒப்படைத்தனர். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் இப்போராட்டத்தின் காரணமாக கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன், உர விற்பனை உள்ளிட்ட அனைத்து வங்கி பணிகளும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.