திருச்சி மாவட்டம், லால்குடி அரசு மருத்துவமனை முன்பு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவரை போலீசார் சம்பளமாக மீட்டனர். லால்குடி அரசு மருத்துவமனை முன்பு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடம்பில் எந்த காயங்கள் இன்றி சடலமாக கிடந்துள்ளார் இதைக் கண்ட அப்பகுதி மக்கள் லால்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார் இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக இங்கு வந்தார், எப்படி இறந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
அரசு ஆஸ்பத்திரி முன்பு அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு….
- by Authour
