கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தரகம்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில் தரகம்பட்டி கடவூர் சிந்தாமணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 774 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இக்கல்லூரியானது தரகம்பட்டி பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
2022 -23 மானிய கூட்டத்தொடரின் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது இக்கல்லூரிக்கு மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்காக ரூபாய் 12.40 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அவரின் மீது ஒதுக்கீடு செய்யப்பட்டாய் கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்து
கொண்டு பூமி பூஜை இட்டு கட்டுமான பணிகளைத் துவக்கி வைத்தார்.
14 வகுப்பறைகள், 5 ஆய்வகங்கள், ஒரு நூலகம்,கருத்தரங்க கூடம், முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கான அறைகள் கழிப்பிடங்கள் ஆகியவை அடங்கிய தரைதளம் மற்றும் முதல் இரண்டாவது மாடி தளங்கள் என ஐம்பதாயிரம் சதுர அடி பரப்பில் கட்டப்பட உள்ளன
15 மாத காலங்களுக்குள் இந்த கட்டிட கட்டுமான பணிகள் முடிவு பெற்று மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தெரிவித்தார்.
இந்த பூமி பூஜை விழாவில் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்