அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கடந்த ஆண்டு அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டு தற்காலிகமாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கான இடத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயங்கொண்டதிற்கு அருகில் உள்ள உடையார்பாளையம் பேரூராட்சியில் அரசு கலைக் கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது உடையார் பாளையம் நீண்ட காலமாக ஜெயங்கொண்டம் உள்ளடங்கிய தாலுக்காவாக உள்ளது இதில் அரசுக்கு சொந்தமான சுமார் 8 ஏக்கர் நிலம் பயன்பாடு இல்லாமல் தரிசாக உள்ளது. எனவே ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கட்டிடம் கட்டுவதற்கான இட தேர்வு நடைபெற்று வரும் நிலையில், உடையார் பாளையத்தில் தரிசாக உள்ள இடத்தில் அரசு கலைக் கல்லூரி காண கட்டிடத்தை கட்ட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.