கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நீலாம்பூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எல்என்டி பைபாஸ் சாலை செல்கிறது இந்நிலையில் அவிநாசி சாலையில் இருந்து எல்என்டி பைபாஸ் சந்திக்கும் இடத்தில் குளத்தூர் கிராமம் உள்ளது அந்த கிராமத்திலிருந்து காந்திபுரம் நோக்கி 93 என்ற அரசு பேருந்து இயங்கி வருகிறது வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு குளத்தூரில் இருந்து காந்திபுரம் நோக்கி பைபாஸ் சந்திப்பில் இருந்து அவினாசாலைக்கு பேருந்து சென்று
கொண்டிருக்கும் போது அங்குள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றுள்ளது அப்போது இருசக்கர வாகனம் ஒன்று கடந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது இதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . இதனை அடுத்து அருகில் இருந்த நபர்கள் உடனடியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் அதில் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்தவர் கிணத்துக்கடவு அரசம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரிய வந்தது பின்னர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான பதை பதைக்கும் சிசிடிவி வெளியாகி உள்ளது.