நீலகிரி மாவட்டத்தில் இருந்து பில்லூர் அணை செல்வதற்கு பிரதான சாலையாக மஞ்சூர் முதல் கெத்தை சாலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் அவ்வப்போது யானைகள் காட்டெருமை மான் மற்றும் வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது இந்த நிலையில் நேற்று அவ்வழியாகச் சென்ற அரசு பேருந்துக்கு முன்பு காட்டு யானைகள் கூட்டம் இரண்டு குட்டியுடன் சாலையில் நின்று கொண்டிருந்தது இதனை சிறிதும் கூட பொருட்படுத்தாமல் பேருந்தின் ஓட்டுனர் ஆபத்தை உணராமல் பேருந்தை முன்னோக்கி இயக்கினார் இதனால் யானைகள் பயந்து கொண்டு சாலையின் இரண்டு புறமும் நடந்து சென்று காட்டு யானை காட்டுக்குள் சென்றது இருப்பினும் பயணிகள் பேருந்துகள் இருக்கும்போது ஓட்டுநர் விதமான செயலில் ஈடுபட்டது சமூக ஆர்வலர்கள் இடையே மிகுந்த வேதனையை அளித்துள்ளது.