Skip to content

அரசு பஸ் மோதி இளைஞர் பலி…. அரியலூர் அருகே சம்பவம்..

  • by Authour

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், அதிகாரம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் பாலன் (31). இவா், அரியலூா் ஜெயலலிதா நகரில் தங்கி, பெரம்பலூா் மாவட்டம் அல்லிநகரம் பகுதியிலுள்ள ஒரு ஹாலோ பிளாக் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் இவா் அரியலூரில் இருந்து அல்லிநகரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். பெரம்பலூா் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த

அவா், ரிதான்யா மஹால் அருகே , முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிரே பெரம்பலூரில் இருந்து அரியலூா் நோக்கி வந்த அரசுப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாலன் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு கயா்லாபாத் காவல் துறையினா், பாலனின் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!