ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ தொழிற்சங்கம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்துள்ளது. மே 3-ம் தேதிக்கு பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநரிடம் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை பணி நியமனம் செய்வதற்கு பதிலாக நிரந்தரமாக ஓட்டுநர்களை பணிக்கு எடுக்க நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மே மாதத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் பட்சத்தில், கோடை விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் செல்வோர் மிகுந்த சிரமம் அடைய வாய்ப்புள்ளது.
3